இந்தியா: விழுந்து நொறுங்கி தீப்பிடித்த மிக்-29 ரக போர் விமானம்! கடைசி நொடியில் தப்பி உயிர் பிழைத்த விமானி! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் ஆக்ரா அருகே இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக உயிர் தப்பினார்.

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட மிக்-29 ரக போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று, ஆக்ரா அருகிலுள்ள சோங்கா கிராமம் பகுதியில் இந்த ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து தீப்பிடித்தது.

விபத்து நேரத்திலேயே விமானி சாமர்த்தியமாக பாராசூட்டின் மூலம் தப்பித்துக் கொண்டார். 

இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் பகுதியில் இதே ரகத்திலான மற்றொரு மிக்-29 விமானமும் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இரண்டு மாதங்களில் இரண்டாவது மிக்-29 விபத்து இது ஆகும்.

பஞ்சாபிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் ஆக்ரா அருகே தீப்பிடித்து எரிந்ததாகவும், விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian army flight accident near Agra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->