எல்லை பகுதியில் டிஜிட்டல் முறையில் கண்காணிப்பு - இந்திய ராணுவம் திட்டம் - Seithipunal
Seithipunal


சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் முறைகளில் கண்காணிப்பு பணிகளை செயல்படுத்த இந்திய ராணுவம் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தானியங்கி தொழில்நுட்பங்கள், செயர்க்கை நுண்ணறிவு மற்றும் ட்ரோன்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் எல்லைப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், இந்தியா ராணுவ வீரர்களுக்கு டிஜிட்டல் ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் அவற்றை முறியடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் ட்ரோன்கள், ரேடர்கள் மற்றும் செயற்கைகள் மூலம் சிக்னல்கள் உடனடியாக அனுப்புவதற்கும், கண்காணிப்பு, போர்க்கள நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் முறையில் வேகமாக பரிமாறுவதற்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 12க்கும் மேற்பட்ட கண்காணிப்பு மையங்களை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைக்க உள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian army plans to built Digital Monitoring Centers in Border Region


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->