நடுக்கடலில் கவிழ்ந்த படகு.! 20 வங்கதேச மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படை.! - Seithipunal
Seithipunal


நடுக்கடலில் கவிழ்ந்த படகில் பயணம் செய்த 20 வங்கதேச மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

வங்காளதேச மீனவர்கள் சென்ற மீன்பிடி படகு ஒன்று சிட்ரங் சூறாவளி தாக்குதலால் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த 20 மீனவர்கள் நீரில் தத்தளித்த நிலையில், கடலில் மிதந்த பெரிய பொருள் ஒன்றை பிடித்து கொண்டு வெகு நேரமாக உதவிக்காக காத்திருந்தனர்.

அப்பொழுது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் விமானம் ஒன்று, நடுக்கடலில் சிக்கி தவித்த வங்காளதேச மீனவர்களை உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அவர்களை பாதுகாப்பாக மீட்ட இந்திய கடலோர காவல் படையினர், வங்காளதேச கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையானது இரு நாடுகளின் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் எடுக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Coast Guard rescued 20 Bangladeshi fishermen


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->