பெற்ற பிள்ளையை, விற்று ஐபோன் வாங்கிய தம்பதி.! பகீர் காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


மிகவும் பணக்கஷ்டத்தில் இருந்த ஒரு தம்பதி திடீரென்று ஐபோன் வாங்கியது பற்றி அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்கானா மாவட்டத்தில் வசித்து வந்த ஜெயதேவ்- ஷதி தம்பதிகள் தங்களது குழந்தையை விற்று ஐபோன் வாங்கி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளத்தில் அவர்களுக்கு இருக்கும் தீராத மோகத்தினால் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் வீடியோ போட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த மோசமான சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மிகவும் பொருளாதார நெருக்கடியில் அந்த தம்பதி இருந்து வந்துள்ளனர். ஆனால் திடீரென்று அவர்கள் ஐபோன் பயன்படுத்தியதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர். அவர்களைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் ஏற்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரித்ததில் அவர்கள் குழந்தையை விற்று ஐபோன் வாங்கியது தெரியவந்துள்ளது. 

இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை வாங்கிய பெண் பிரியங்கா கோஷ் இருவரையும் கைது செய்துள்ளனர். ஜெயதேவ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடி வருகின்றனர். 

அந்த தம்பதி குழந்தையை விற்று அதில் வாங்கிய பணத்தை கொண்டு புதிய ஐபோன் வாங்கி மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று ரீல்ஸ் செய்துள்ளனர். இது குறித்த வாக்குமூலத்தை அந்த தாய் போலீசிடம் தெரிவித்த போது அது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian couples sell baby buy iPhone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->