சுவிட்சர்லாந்து பெண்ணை டெல்லியில் கொலை செய்த இந்தியர்: பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


புதுடெல்லி, திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங். இவர் சொந்த வேலைக்காக அடிக்கடி சுவிட்சர்லாந்து வந்தபோது அந்த நாட்டைச் சேர்ந்த லேனா பெர்கர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்தனர். 

குர்ப்ரீத் சுவிட்சர்லாந்து செல்லும் போதெல்லாம் லேனாவை சந்தித்து வந்தார். கடந்த சில மாதங்களாக குர்ப்ரீத்திற்கு லேனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. தன்னுடன் பழகிக்கொண்டே வேறொரு ஆணுடன் பழக்கம் வைத்திருப்பதா என லேனாவை கொலை செய்ய திட்டமிட்டார். 

பின்னர் குர்ப்ரீத் வேறு ஒரு பெண்ணின் தகவல்களை வைத்து இந்தியாவில் ஒரு காரை வாங்கி லேனாவை இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தார். 

லேனா கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இந்தியா வந்தார். வந்தவருடன் குர்ப்ரீத் 4 நாட்கள் வரை நன்றாக பேசி பழகி மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக குர்ப்ரீத் லேனாவை தாக்கி கை, கால்களை கட்டி பின்னர் கொலை செய்தார். 

குர்ப்ரீத், அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததால் சில நாட்கள் கழித்து துர்நாற்றம் வீச துவங்கியது. உடலை மறைக்க என்ன செய்வது என தவித்த குர்ப்ரீத் தான் வாங்கிய வேறொரு பெண்ணின் காரில் ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் சடலத்தை வைத்து காரை நீண்ட தூரம் ஓட்டிச் சென்று அங்கிருந்த ஒரு அரசு பள்ளி அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வீசிவிட்டு வேகமாக சென்று விட்டார். 

அங்கிருந்த சடலத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குர்ப்ரீத் கார் சென்றது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் குர்ப்ரீத்திடம் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் குர்ப்ரீத் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

பின்னர் போலீசார் அவரது மற்றொரு கார், அவர் வீட்டில் இருந்த சுமார் ரூ. 2.25 கோடி பணத்தையும் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian kills Swiss female dumps body on road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->