அரபிக்கடலில் இந்திய கடற்படையின் பிரமாண்ட போர் பயிற்சி.!  - Seithipunal
Seithipunal


அரபிக்கடலில் இந்திய கடற்படையின் பிரமாண்ட போர் பயிற்சி.! 

சமீப காலமாக சீனா இந்திய பெருங்கடலில் கால்பதிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான், மியான்மர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் "துறைமுக மேம்பாட்டு திட்டங்கள்" என்ற பெயரில் மறைமுகமாக சீனா கடற்படைத் தளங்களை அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. சீனாவின் சதித் திட்டங்களை இந்தியா முறியடித்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவுக்கு சவால் விடுக்கும் விதமாக இந்திய கடற்படை சார்பில் அரபிக் கடலில் நேற்று பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. அந்தப் பயிற்சியில், விக்ரமாதித்யா, விக்ராந்த் உள்ளிட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல்களும், 6 நாசகார போர்க்கப்பல்களும் பங்கேற்றன.

அப்போது முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட போர் விமானங்கள் விக்ரமாதித்யா, விக்ராந்த் போர்க்கப்பல்களில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தன. அதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த எம்எச்60ஆர், காமோவ், சீ-கிங்,சேத்தக் ரகங்களை சேர்ந்த ஹெலிகாப்டர்களும் போர்க்கப்பல்களில் இருந்து மேல் எழும்பின.

இந்தப் போர் பயிற்சி குறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் தெரிவித்ததாவது, “நாட்டின் பாதுகாப்பு, இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. 

கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட போர் பயிற்சிகளில் இது மிகவும் முக்கியமானது. ஒரே நேரத்தில் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian navy war exercise in arabic sea


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->