முதல்முறையாக குஜராத்தில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி.. சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பங்கேற்காததற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தியன் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ளது. 

இறுதியாக 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற இந்த போட்டி கடந்த 2020-ம் ஆண்டு கோவாவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு இன்று குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் நடைபெறுகிறது. 

இப்போட்டியில் கால்பந்து, டென்னிஸ், பேட்மிட்டன், கூடைப்பந்து உட்பட 36 விளையாட்டு போட்டிகள் இடம்பெற்ற நிலையில், கோ-கோ, மல்லர் கம்பம், யோகாசனம் உள்ளிட்ட போட்டிகள் முதன்முறையாக இடம் பெறுகின்றன. இதில், முன்கூட்டியே டேபிள் டென்னிஸ் ஆட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன. 

இப்போட்டியில், சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். ஆனால், ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா ஆகியோர் உடலில் ஏற்பட்ட காயங்களால் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், பளுதூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல்,  தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், வில் வித்தை, உள்ளிட்ட போட்டியில் சாம்பியன் பெற்றவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். 

இன்று (செப்.,27) தொடங்கும் இப்போட்டி அக்டோபர் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போட்டிகள் நடைபெற உள்ளதால் வீரர், வீராங்கனைகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian olympic in kujarat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->