லண்டனில் இரண்டாவது முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனில் சோப்ரா மேயராக தேர்வு.! - Seithipunal
Seithipunal


லண்டனில் இரண்டாவது முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனில் சோப்ரா மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் போரா ஆப் சவுத்வார்க் மேயராக டெல்லியில் பிறந்தவரான சுனில் சோப்ரா மத்திய லண்டனில் நடந்த நிகழ்ச்சியின் பதவி ஏற்று கொண்டுள்ளார். இவர் இதற்குமுன்பாக 2013- 14ல் துணை மேயராகவும், 2014- 15ல் அந்நகர மேயராக இருந்துள்ளார். 

போரோ ஆப் சவுத்வார்க் நகரின் மேயர் பதவியை பெற்றுள்ள முதலாவது இந்தியர் என்ற பெருமையை சுனில் சோப்ரா பெற்றுள்ளார்.

இவர் கடந்த 1973- 74 ல் டெல்லி பல்கலையன் சுப்ரீம் கவுன்சிலர் பதவியையும், பின்பு தேசிய மாணவர் சங்கத்தின் டெல்லி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 1979 இல் பிரிட்டன் சென்ற சுனில் சோப்ரா தற்போது அந்நாட்டின் தலைநகரான லண்டனின், போரோ ஆப் சவுத்வார்க் நகருக்கு இரண்டாவது முறையாக மேயராகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian origin Sunil Chopra elected as mayor in landon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->