இந்திய ரயில்களில் கல்வீச்சு: 7,971 சம்பவங்கள் – 4,549 பேர் கைது!
Indian Rail Way Attacked incident data
இந்திய ரயில்களில் 7,971 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, இதில் 4,549 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
பாஜக உறுப்பினர் தர்மபுரி அரவிந்த் ரயில்களில் கல்வீச்சு சம்பவங்கள், அவற்றின் காரணங்கள், மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், 2023 முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் மீது 7,971 கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அமைச்சரின் பதிலில் முக்கியமான குறிப்புகள்:
ஒவ்வொரு சம்பவத்திற்கும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, முழுமையான விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவங்களுடன் தொடர்புடைய 4,549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த ரயில்களின் பாகங்களை பழுதுபார்க்க, மொத்தம் ₹5.79 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சம்பவங்களை தடுக்கும் விதமாக, ரயில்வே பாதுகாப்பு படை, அரசு ரயில்வே காவல் துறை, மாவட்ட காவல் துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் இணைந்து, புகழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
மேலும், கல்வீச்சு சம்பவங்கள் அதிகம் நிகழும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
Indian Rail Way Attacked incident data