அக்னிவீர் அன்று எதிர்ப்பு தெரிவித்த CM ஸ்டாலின் இன்று ஆதரவா? திராவிட மாடலா? தில்லாலங்கடி மாடலா? ஹெச்.ராஜா! - Seithipunal
Seithipunal


பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

"நிலையில்லாத சிந்தனை!!  நிதானமில்லாத முதல்வர்!! 

இராணுவத்திற்கு இளைஞர்களை சேர்க்கும் அக்னிவீர் திட்டத்தை மத்திய அரசு அறிவித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்? 

இன்று அதே அக்னிவீர் திட்டத்தில் இராணுவத்திற்கு இளைஞர்களை சேர்க்கும் முகாமுக்கு தனது ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரம் செய்கிறார். 

தேசத்திற்கு நன்மை பயக்கும் அக்னிவீர் திட்டத்தை அன்று எதிர்த்துவிட்டு  அத்திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது தெரிந்த உடன் இன்று அத்திட்டத்தை தான் செயல்படுத்துவது போல் விளம்பரம் செய்ய முயல்கிறார்... 

இந்த போலி அரசியலுக்குப் பெயர் .. திராவிட மாடலா? தில்லாலங்கடி மாடலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழக அரசின் அந்த அறிவிப்பு: இராணுவ ஆட்சி சேர்ப்பு முகாம்

இராணிப்புரம் மாவட்டம்

இந்திய இராணுவத்தின் Agniveer திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான இராணுவ ஆட்சி சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

வயது வரம்பு:
17 ½ முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள்

தகுதி:
10ம் வகுப்பு & 12ம் வகுப்பு முடித்தவர்கள்

பிரிவுகள்:
General Duty
Technical Duty
Clerk / Store Keeper Technical
Tradesman
(8ம் வகுப்பு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் தகுதிகள் தேவை – பாரா / மாவட்ட / கல்லூரி அளவில் விளையாட்டு சான்றிதழ்கள் அவசியம்)

விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.03.2025 முதல் 10.04.2025 வரை

விண்ணப்பிக்க: www.joinindianarmy.nic.in

ஒருவருக்கு ஒரு தேதியில் இரண்டு பிரிவுகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஆட்சி சேர்ப்பு இயக்குநர், இராணுவ ஆட்சி சேர்ப்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP H Raja Say About DMK MK Stalin Agniveer


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->