பழனி கோயிலில் பாஜக நிர்வாகி மரணம்! ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை - பெரும் சோகத்தில் அண்ணாமலை!
Palani temple Devotee Dies
சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வழிபாட்டிற்குப் பிறகு பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது, பாஜக நிர்வாகி செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கினார்.
உடனே அருகிலிருந்தவர்கள் அவரை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் திரு. செல்வமணி அவர்கள், பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு பாஜக உறுதுணையாக இருக்கும். நாமக்கல் மாவட்ட பாஜக, செல்வமணி அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Palani temple Devotee Dies