2 ஆண்டுகளில் அமெரிக்கா சாலைகளை விட இந்திய சாலைகள்  சிறப்பாக இருக்கும்..சொல்கிறார் நிதின் கட்கரி! - Seithipunal
Seithipunal


சூரத்- சென்னை இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி மும்பையில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  கூறியதாவது:-நாடு முழுவதும் மனிதர்களால் நேரடியாக கட்டணம் வசூல் செய்யப்படும் சுங்கச்சாவடிகள் விரைவில் மூடப்படும் என கூறினார் .

மேலும் "இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பானதாக இருக்கும்.

 மத்திய அரசு விரைவில் புதிய சுங்க கட்டண கொள்கையை அறிமுகப்படுத்தும். புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டால், சுங்க கட்டணம் பற்றி யாரும் புகார் செய்ய எந்த காரணமும் இருக்காது.

சூரத்- சென்னை இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.டெல்லி- மும்பை நெடுஞ்சாலை சூரத் வழியாக போடப்படுகிறது. டெல்லி- ஜெய்பூர், மும்பை- கோவா நெடுஞ்சாலை பணிகள் என் பதவி காலத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள். 

இதேபோல சூரத்தில் இருந்து நேரடியாக நாசிக், அகமதுநகர், சோலாப்பூர் மற்றும் தென்பகுதிகளுக்கு செல்ல முடியும். சூரத்தில் இருந்து தென்பகுதிக்கு செல்ல ஒருவர் மும்பை, புனே வரவேண்டிய அவசியம் இருக்காது.

எனினும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த சாலை பணி வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும். இது கொங்கன் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்."இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian roads will be better than US roads in 2 years. Nitin Gadkari says


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->