அதிகாலையிலேயே.. திடீரென கொந்தளித்த சமுத்திரம்.. இரு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.!!
Indian sea suddenly became turbulent Red alert
தமிழ்நாட்டின் தென் கடலோரப் பகுதிகளிலும் கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளிலும் இன்று அதிகாலை 2:30 மணி முதல் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த கடல் சீற்றமானது நாளை இரவு 11:30 மணி வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதேபோன்று கடலோரம் வசிக்கும் மீனவர்கள் தங்கள் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சீற்றத்தால் கடல் அலைகள் இரண்டு மீட்டர்கள் வரை எழக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோன்று சுற்றுலா செல்லும் பொதுமக்களும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றம் இந்திய வரலாற்றில் கடல் சீற்றத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian sea suddenly became turbulent Red alert