கொச்சியில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம்.! போபாலில் தரையிறக்கப்பட்டதற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று நாட்டின் தலைநகரான டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. 

அப்போது, விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவருக்கு திடீரென மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், விமானம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. 

இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, " விமானத்தில் பயணி ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை தேவைப்பட்டதனால், விமானம் போபாலில் தரையிறக்கப்பட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். 

போபாலில் விமானம் தரையிறக்கப்பட்ட உடனே, விமான நிலையக் குழுவினர், காலதாமதம் செய்யமல் விரைவாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை ஆம்புலன்ஸில் ஏற்றி, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக சமீபத்தில், கோழிக்கோட்டில் இருந்து சவூதி நாட்டிற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்படும் போது, அதன் வால் பகுதி தரையில் உரசியதால் உடனடியாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indigo flight emergency landing in bopal airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->