பயணிகளின் பைகளை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற இண்டிகோ விமானம்.!  - Seithipunal
Seithipunal


சமீப நாட்களாகவே விமானங்களில் பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், பயணிகள் அனைவரும் பெரும் அச்சத்திலேயே பயணம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இண்டிகோ விமானத்தில் தான் அதிகம் நடந்துள்ளன.

அந்தவகையில்,  இண்டிகோ விமானம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு சென்றது. இருப்பினும், இந்த விமானம் பயணிகளின் முப்பத்தேழு பைகளை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றதாக நேற்று இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, "ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்ட 6E 409 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் முப்பத்தேழு பைகள் கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளது. 

இந்த பைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்தில் பயணிகளின் முகவரிகளுக்கு பாதுகாப்பாக வழங்கப்படும். பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு இண்டிகோ நிறுவனம் வருத்தமடைவதாக தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indigo flight left thirty seven luggage in hydrabad airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->