இனி "ஒரு கிலோ அரிசி ரூ.25" தான்.!! வெளியான சூப்பர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அரிசியை முக்கிய உணவாக எடுத்து கொள்கின்றனர். இதன் காரணமாக அரிசி விலை ஆண்டுதோறும்  தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதாலும் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 'பாரத் அரிசி' என்ற பெயரில் ஒரு கிலோ அரிசியை ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலம் இந்த குறைந்த விலை அரிசி விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்க படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே கோதுமை மாவு, பருப்பு வகைகளை மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

info central govt plan to sell rice at Rs25 per kg


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->