ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் சாலை விபத்தில் உயிரிழந்தார்: சோகமான சம்பவம்
IPS officer Harsh Bardhan dies in road accident Tragic incident
2023 ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்ற 26 வயதான ஹர்ஷ் பர்தன், பயிற்சியை முடித்து புதிய பொறுப்பேற்க சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மைசூரு போலீஸ் அகாடமியில் நான்கு வார பயிற்சியை சமீபத்தில் நிறைவுசெய்து, ஹோலேநர சிபூரில் புரபேஷனரி உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கும் பயணத்தில் இருந்தார்.
பொலிஸ் வாகனத்தில் பயணம் செய்த ஹர்ஷ் பர்தனின் வாகனத்தின் டயர் திடீரென வெடித்ததால், வாகனம் சாலையோரத்தில் இருந்த வீடு மற்றும் மரம் மீது மோதியது. இதன் விளைவாக, டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், ஹர்ஷ் பர்தன் தலையில் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து, “ஹர்ஷ் பர்தன் இப்போது சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக முன் வந்தார், ஆனால் இப்படி கொடிய விபத்து நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டார்.
English Summary
IPS officer Harsh Bardhan dies in road accident Tragic incident