திமுக ஆட்சி நரகம் - பிரபல தமிழ் நடிகை காட்டம்!
Actress Gayathri Raghuram replay to CM Stalin DMK government fail in TN
முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம் .
தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்.
இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடுவது, திமுக ஆட்சிக்காலம்.
இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டேன்" என்ற முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "3.5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் மக்களுக்கு வாழ்க்கை இல்லை, நிம்மதியாகவோ பயமின்றியோ பாதுகாப்பாகவோ வாழ வழி இல்லை. திமுக ஆட்சி நரகம் DMKFailsTN" என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
English Summary
Actress Gayathri Raghuram replay to CM Stalin DMK government fail in TN