திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் - பயனர்கள் கடும் அவதி.! - Seithipunal
Seithipunal


பயணிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக முன்பதிவு செய்ய இந்திய ரெயில்வே ஐஆர்சிடிசி இணையதளத்தை உருவாக்கியது. இந்த இணையதளம் ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக இன்று முடங்கியுள்ளது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிக வெப் டிராபிக் காரணமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.

இதனால், டிக்கெட் எடுக்கும் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். பல பயனர்களால் இணையதளத்தில் உள்நுழைய முடியவில்லை. மேலும் உள்நுழைய முடிந்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

இன்று காலை 10 மணிக்கு பயனர்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றபோது இந்த செயலிழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பல பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

irtc website not working


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->