இஸ்லாமிய பெண்கள் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ளலாம்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Islamic women can marry anyone
பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது முஸ்லிம் பெண் ஒருவர் 33 வயதுடைய ஆணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப் பெண் சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இஸ்லாமிய விதிப்படி ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பருவமெய்தியதும் அவர்கள் திருமணம் செய்யும் தகுதி உடையவர்கள் ஆவார்கள். அந்த வகையில் 15 வயது முதலே அவர்கள் பெரியவர்களாக கருதப்பட வேண்டும் என பெண் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பெண்ணின் பெற்றோர் தரப்பும் சில கருத்துக்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பருவமெய்திய இஸ்லாமியப் பெண்ணுக்கு அவர் விரும்பும் யாரையும் திருமணம் செய்யும் உரிமை இருக்கிறது. அந்தப் பெண்ணின் முடிவில் அவரது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் தலையிட உரிமை இல்லை என கூறினார். மேலும் இந்த தம்பதிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முஸ்லிம் பெண்களின் திருமணம் என்பது முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Islamic women can marry anyone