இஸ்ரோவின் கனவு..."ஆதித்யா எல்1" திட்டம்.. ஜனவரியில் சூரியனை நோக்கி ஓர் பயணம்..!
ISRO dream aditya L1 project launching on jan2024
சூரியன் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வரும் 2024 ஜனவரியில் ஆதித்யா எல்1 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை நாசாவுடன் இணைந்து இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. வரும் 2024 ஜனவரியில் ஸ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி-சி 56 ராக்கெட்டில் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தங்களை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் 6 பேலோடுகள் பொருத்தப்பட்ட உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள சோலார் அப்சர்வேட்டரி மூலம் உருவாக்கப்பட்ட "உயர் ஆற்றல் L-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டரானது" ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
இந்த "ஹீலியோஸ்" என்பது அடுத்த தலைமுறை ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும். இது சூரியனில் ஏற்படும் மாற்றம் மற்றும் நிகழ்வுகளை கண்காணிக்கும் தன்மை கொண்டது. ஆதித்யா-எல்1 மிஷன் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவு திட்டமாகும். சூரியனை ஆராயும் இந்தியாவின் முதல் பணி என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ISRO dream aditya L1 project launching on jan2024