அக்.21ம் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை தொடக்கம்!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் வியோமா மித்ரா என்ற பெண் ரோபோவை அனுப்ப உள்ளது. அதற்கு முன்பு பல சோதனைகளில் நடைபெற உள்ள நிலையில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தேரிவித்துள்ளார். 

ராக்கெட்டில் உள்ள விண்கலன் விண்ணுக்கு செலுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பும் போது வங்கக்கடலில் இறங்கியதும் அதனை பத்திரமாக மீட்பதற்கான சோதனை நடைபெற உள்ளது. விண்வெளி வீரர்கள் தங்கும் விண்கலத்தின் பகுதியை சோதிக்கும் இந்த சோதனையானது விண்கலம் பூமிக்கு திரும்பும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதிலிருந்து தப்பித்து அவர்களை கடற்படை வீரர்கள் காப்பாற்றும் முறை பற்றிய ஒத்திகையாகும். இந்த சோதனை வெற்றி பெற்றால் முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்திற்கு பிறகு மனிதரை விண்ணிற்கு அனுப்புவதற்கு அடித்தளமாக அமையும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isro first trial launch of Gaganyaan project on oct21


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->