நிலவில் பனிப்படிவுகளா!!! உறுதி செய்த சந்திரயான் 3 : - ISRO தகவல்.... - Seithipunal
Seithipunal


கடந்த 14.06.2024 நாளில் நிலவை ஆய்வு செய்வதற்காகச் சந்திராயன்-3 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பின்னர் இந்த விண்கலத்தில் இருந்து வந்த லேண்டர், 23.08.2024 மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நிலவில் உறைந்த நிலையில் பனிப்படிவுகள் இருப்பதைச் சந்திராயன் -3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக ISRO தெரிவித்துள்ளது.

ISRO:

மேலும் அதிக எலக்ட்ரான் அடர்த்தி இருப்பதையும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பிளாஸ்மா இயக்கவியலில் சந்திரனின் மேல் ஓட்டு பகுதியில் காந்தப்புலங்களின் அதிகப்படியான பங்கைக் குறிக்கிறது.

மேலும் இஸ்ரோ வெளியிட்ட தகவலில், சந்திரனில் ஒரு கன சென்டிமீட்டருக்குச் சுமார் 23,000 எலக்ட்ரான்கள் என வியக்கத்தக்க உயர் எலக்ட்ரான் அடர்த்தியை வெளிப்படுத்துகிறது.

இது சூரிய ஒளி பக்கத்தில் உள்ளதை விட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் எதிர்கால சந்திர ஆய்வுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISRO inform that there ice crystals on the moon Confirmed by Chandrayaan 3


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->