நிலவின் மேற்பரப்பில்.. விக்ரம் லேண்டர் அனுப்பிய போட்டோ.!! இஸ்ரோ கொடுத்த புது அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வழி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது.

சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை நிறைவு செய்து நிலவின் சுற்றுவட்டப்பாதையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே சந்திராயன்-3 விண்கலம் நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் பாதை குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேக குறைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

தற்போது சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் 25x134 கி.மீ. தூரத்தில் உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஒரு ஆகஸ்ட் 23ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் பணிகள் தொடங்கும். 

இதற்கிடையே நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ள விக்ரம் டேண்டர் புதிய புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. சந்திரயான்-3 வின்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பில் உள்ள அபாயத்தை கண்டறிந்து தவிர்க்க உயர் தொழில்நுட்பம் கொண்ட கேமரா (LHDAC) பொருத்தப்பட்டுள்ளது.

அந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் தொலைதூரப் பகுதியின் படங்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி உள்ளது. இந்த கேமரா மூலம் பாறைகள் அல்லது ஆழமான பள்ளங்கள் இல்லாமல் விக்ரம் லேண்டர் இறங்கும் போது பாதுகாப்பான தரையிறங்கும் பகுதியைக் கண்டறிய உதவும். தற்போது விக்ரம் லேண்டரால் அனுப்பப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO released photo sent by Vikram lander by LHDAC camera


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->