வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்.! - Seithipunal
Seithipunal


இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து இன்று காலை 9.18 மணி அளவில் எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 ஆகிய 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. 

இந்த செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கி.மீ. புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதில் 8.7 கிலோ எடை 'ஆஸாதிசாட்-2' செயற்கைக்கோள் 750 மாணவிகள் இணைந்து உருவாக்கியது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட் தோல்வி அடைந்த நிலையில், இஸ்ரோ தற்பொழுது மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி2  ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO successfully launches SSLV D2 rocket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->