''சர்வாதிகாரி'' போல் செயல்படுகிறார்... சந்திரபாபு நாயுடுவை சாடிய ஜெகன்மோகன் ரெட்டி.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, தாடேபள்ளியில் அரசு அனுமதி இன்றி கட்டப்பட்டு வருவதாக தெரிவித்து ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் நேற்று இடித்து தரைமட்டம் ஆக்கினர். 

கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே விசாகப்பட்டினம் அடுத்துள்ள பெண்டாடா பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் கட்சிக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

அதில், விசாகப்பட்டினம் மாநகராட்சி பெருநகர் குழு ஆணையத்தின் அனுமதி இல்லாமல் கட்சி அலுவலகம் கட்டப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் காட்சி அலுவலகம் இடிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பதாவது, புதியதாக ஆட்சி பொறுப்பை ஏற்று சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.

மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி இதற்காக தலைவணங்காது. இந்த மிரட்டல் வன்முறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இதுபோன்ற தவறான செயல்களை கண்டிக்க வேண்டும் என நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaganmohan Reddy says Chandrababu Naidu acts dictator


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->