வெட்கம் இல்லையா உங்களுக்கு! பாஜகவை சாடிய ஜெய்ராம் ரமேஷ்! - Seithipunal
Seithipunal


இந்தியா அடுத்த மாதம் ஜி-20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. இதற்கான லோகோ, இணையதளம் மற்றும் கருப்பொருட்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். நேற்று வெளியிடப்பட்ட ஜி20 லோகோவில் காவி மற்றும் பச்சை நிறம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் தாமரையின் மீது பூமி பந்து வைத்தது போல் உருவாக்கப்பட்டிருந்தது. 

பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையை ஜி-20 லோகோவிலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியிலும் அதிகமாக பயன்படுத்தியிருப்பதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை ஜவஹர்லால் நேரு மறுத்துவிட்டார். தற்பொழுது மத்தியில் ஆளும் பாஜக ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான லோகோவில் பாஜகவின் சின்னத்தை பயன்படுத்தி உள்ளது.

மோடியும் பாஜகவும் வெட்கம் இன்றி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்" என கடுமையாக பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்துள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதலை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jairam Ramesh slammed the BJP and modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->