திடீர் சோதனையில் இறங்கிய NIA அதிகாரிகள்: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் இன்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை பயங்கரவாதிகளுடன் தொடர்பு, பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள கலந்தான் போராவை சேர்ந்த மோசாமில் ஷபி கான் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இவர் அழகுச் சாதனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஊழியர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 

இது தவிர மேலும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய படை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த சோதனையில் துணை ராணுவத்தினர், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu and Kashmir NIA raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->