ஜம்மு காஷ்மீர் | துப்பாக்கிச் சண்டை: வழிநடத்துபவரை பாதுகாக்க குண்டை தன்மீது பாய்த்து உயிரிழந்த மோப்பநாய் ! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர், ரஜோரி நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியில் மோப்ப நாயுடன் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். 

இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 

மேலும் அதிகாரி உள்பட 3 பேர் காயமடைந்தனர். ராணுவ மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் உயிரிழந்தது. 

தன்னை வழிநடத்துபவரை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டை தன்மீது பாய்த்து உயிர் இழந்தது. 

நடந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து சண்டை நீடித்து வரும் நிலையில் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir army Gun fight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->