4 ஆண்டுகளுக்குப் பின் வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஹுரியத் மாநாடு தலைவா்!  - Seithipunal
Seithipunal


கடந்த 4 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வீட்டு காவலில் இருந்த நேற்று விடுவிக்கப்பட்டார். 

மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக கடந்த 2019 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து கிளர்ச்சி நடவடிக்கைகளை தவிர்க்க பல்வேறு தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த 1993 ஆம் ஆண்டு பிராந்தியத்தின் 26 பிரிவினைவாத அமைப்புகளை ஒன்றிணைத்து தொடங்கப்பட்ட ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் என்பவர் நைஜீன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிறை வைக்கப்பட்டார். 

காஷ்மீரில் பதற்றம் தணிந்ததும் பல்வேறு தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் உமா் ஃபரூக் 4 ஆண்டுகளாக வீட்டு காவலில் இருந்தார். 

இந்நிலையில் உமா் ஃபரூக் வீட்டு காவலில் இருந்த தன்னை விடுவிக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். 

அந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் பதில அறிக்கையை சமர்ப்பிக்க 4 வாரங்கள் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு அவகாசம் அளித்து கடந்த வாரம் உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து உமா் ஃபரூக் இல்லத்திற்கு நேற்று முன்தினம் காவல்துறை மூத்த அதிகாரிகள் சென்று அவரை விடுவிப்பதாக தெரிவித்தனர். 

பின்னர் 4 ஆண்டுகள் கழித்து நேற்று உமா் ஃபரூக் ஸ்ரீ நகரின் நௌஹட்டா பகுதியில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஜாமியா மசூதி தொழுகையில் பங்கேற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir Hurriyat Conference leader released after 4 years


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->