ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்!
Jammu Kashmir Indian Army man death in border
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோப்போர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஜலூரா குஜ்ஜார்பதி பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்துள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இந்திய ராணுவத்தினர் நேற்று இரவு அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளை தொடங்கினர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, இன்று அதிகாலை இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடங்கியது. இந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு ராணுவ வீரர் தற்காயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவ உதவிக்காக பாதுகாப்புடன் வெளியே கொண்டு செல்ல சக வீரர்கள் முயற்சித்தாலும், அதற்குள் அவர் உயிரிழந்தார்.
பலியான ராணுவ வீரர் தொடர்பான தகவல்களை ராணுவத்தினர் இதுவரை வெளியிடவில்லை. அதே நேரத்தில், பயங்கரவாதிகளை கண்டுபிடித்து முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
English Summary
Jammu Kashmir Indian Army man death in border