48 மணிநேரம் கெடு! வாகா எல்லை மூடல்! மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்திய அரசின் வெளியுறவுத்துறை!
Jammu Kashmir pakistan Attack India Pakistan Rajnathsingh
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான எல்லை, வர்த்தக மற்றும் மக்கள் தொடர்புகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் குடிமக்கள் 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனத் துல்லியமாக கூறப்பட்டுள்ளது.
அதோடு, பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வாகா எல்லை உடனடியாக மூடப்படும். சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியா வருவது தடை செய்யப்படுகிறது. பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை எதிர்கொண்டு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன.
English Summary
Jammu Kashmir pakistan Attack India Pakistan Rajnathsingh