ஹத்ராஸ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு - ஜப்பான் பிரதமர் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர்.

இதையடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா அந்நாட்டு வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹத்ராஸ் சம்பவம் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jappan prime minister condoles hadras croud died peoples


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->