சுரங்க முறைகேடு வழக்கு: ஜார்க்கண்ட் முதல்-மந்திரிக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேடு தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனின் நெருங்கிய நண்பரான மிஷ்ராவையும், மேலும் இருவரையும் அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது. 

மேலும் மிஷ்ராவுக்குச் சொந்தமான இடங்கள் உள்பட மொத்தம் 19 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. 

இதைத்தொடர்ந்து, முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு கடந்த வாரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால் கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக கூறியிருந்த நிலையில், ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. 

மேலும் நான் மிகப் பெரிய குற்றம் இழைத்துவிட்டதாக அமலாக்கத் துறை கருதுமானால், முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்று சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில் வருகிற 17-ந்தேதி ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand CM Hemant Soren summoned by Enforcement department again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->