பழங்குடியின சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நீதிபதி கைது!!
Judge arrested for sexually harassing tribal girls
மத்திய பிரதேசதில் துணை பிரிவு நீதிபதியாக பணி புரிந்துவந்த சுனில் குமார் ஜா கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று மாவட்ட தலைநகரில் இருக்கும் பெண்கள் விடுதி முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் பழங்குடியின சிறுமிகள் தங்கியிருந்த அறைக்குள் சென்று அங்கிருந்த 3 சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.
அவர்களை தொட்டு துன்புறுத்தி, ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதையடுத்து சுனில் குமார் ஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இந்த புகார் உறுதி செய்யப்பட்டு சுனில் குமார் ஜா மீது பாலியல் துன்புறுத்தல், போக்சோ ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு அவரை விசாரித்த சிறப்பு நீதிபதி ஆர்.கே. ஷர்மா சுனில் குமார் ஜாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிட்டார். இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதியே பழங்குடியின சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Judge arrested for sexually harassing tribal girls