நீதிபதிகளின் பயிற்சி திடீர் ரத்து..இந்தியா ,வங்கதேச உறவில் மீண்டும் விரிசல்!
Judges training cancelled India Bangladesh relations strained again
வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை ரத்து செய்து யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவு சீர்குலைந்துள்ளது என்றே சொல்லலாம்.அதுமட்டுமல்லாமல் இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இடைக்கால அரசின் பொறுப்பில் உள்ள சிலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வருகின்றனர். மேலும் அங்குஉள்ள சிறுபான்மை இந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றர்.
இந்தநிலையில் வங்தேசத்தை சேர்ந்த நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையில் 50 பேர், இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாநில நீதித்துறை அகாடமியில் ஜன.10 முதல் 20 வரை பயிற்சி நடைபெற உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.இதற்க்கு உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி, இந்திய சட்டத்துறை அமைச்சகம், இந்த பயிற்சிக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், இன்று வங்கதேச அரசின் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேச நீதிபதிகள், இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.இந்நிலையில் வங்கதேச உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெய்லி ஸ்டார் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவேண்டும் என்ற வங்கதேச அரசின் கோரிக்கை குறித்து இந்திய அரசு பதில் தெரிவிக்காத நிலையில், வங்கதேச நீதிபதிகளின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
Judges training cancelled India Bangladesh relations strained again