கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லியில் இன்று தீர்ப்பு.!!
Judgment in Delhi CM Arvind Kejriwal's bail case today
டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை முறிக்கீடு வழக்கில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்த நிலையில் விசாரணைக்காக ஆஜராக மாறு அமலாக்கத்துறை ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதனை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இவர் தற்போது டெல்லி விகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியும் இந்தியா கூட்டணியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இந்த சூழலில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Judgment in Delhi CM Arvind Kejriwal's bail case today