ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
july month bank holiday list
நாடு முழுவதும் செயல்படும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை வேலை நாட்களாகவும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாட்களாகவும் உள்ளது. வங்கிகள் மூடப்பட்டாலும், ஆன்லைன் வங்கிச் சேவைகள் தொடர்ந்து செயல்படும்.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் வேலை செய்யாத தேதிகளைக் கருத்தில் கொண்டு, வங்கிக் கிளைகளுக்குச் செல்ல கவனமாக திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில், ஜூலை மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும், எத்தனை நாட்கள் விடுமுறை என்பதைத் தெரிந்துக் கொண்டால் அதற்கேற்றவாறு வேலைகளை திட்டமிடலாம்.
ஜூலை 3 - 2024 அன்று MHIP தினத்தையொட்டி ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். ஜூலை 8 அன்று காங் ரதஜாத்ராவை முன்னிட்டு இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை என்பதால், நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.
ஜூலை 17ம் தேதி முஹரம் பண்டிகையையொட்டி நாட்டின் பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாட்டின் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 27ம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் ஜூலை 28ம் தேதி ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
English Summary
july month bank holiday list