பைத்தியம் பிடித்தவர்களுக்கு பதில் தேவை இல்லை சிகிச்சை தான் தேவை - கி.வீரமணி.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சீமானின் கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பெரியார் பற்றிய எனது கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவரான வீரமணி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சீமானை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

அதாவது, "பெரியாரை பற்றி யார் யாரோ பேசுவதை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். நாம் எப்பொழுதும் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு தான் பதில் சொல்பவர்கள். பைத்தியம் பிடித்தவர்களுக்கு அல்ல. பைத்தியம் பிடித்தவர்களுக்கு தேவை சிகிச்சையே தவிர பதில் அல்ல.

ஒருவரின் பெயரை சொல்லி இப்படி பேசுகிறாரே என்று என்னிடம் கேட்டார்கள். அடுத்ததாக இன்னொருவர் பெயரை சொல்லி அவரை இவர் ஆதரிக்கிறாரே என்று கேட்டார். நான் கேட்டேன் ஒரே ஒரு பைத்தியம் தான் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k veeramani speech about ntk leader seeman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->