ரெயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா...! பறிமுதல் செய்த ஆர்.பி.எப் போலீஸ்..!!!
RPF police seize 12 kg of ganja at railway station
நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை 1ல் கேட்பாரற்ற நிலையில் சந்தேகிக்கும் விதமாக பை ஒன்று கிடந்தது.
இதனால் ஐயத்தினை கொண்டு சந்தேகமடைந்த RBF காவலர்கள் அந்த பையை சோதனை செய்தனர்.

அப்போது, 12 கிலோ கஞ்சா அந்த பையில் இருந்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த RBF காவலர்கள் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலில் ஒப்படைத்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.6,00,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது எப்படி அந்த இடத்திற்கு வந்தது? யார் இதைக்கொண்டு வந்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.
English Summary
RPF police seize 12 kg of ganja at railway station