பாஜக தனக்கு வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள்! எந்த எல்லைக்கும் போவார்கள்...!!! - அ.தி.மு.க கூட்டணியை விட்டு விலகிய எஸ்.டி.பி.ஐ 'அபூபக்கர் சித்திக்' - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க.வுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் 'அபூபக்கர் சித்திக்' அறிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,"பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது.பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது.

பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி அங்கீகரிக்காது.தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பா.ஜ.க.வின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது?அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

பா.ஜ.க.வுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள்.நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில் அ.தி.மு.க.வை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.

பா.ஜ.க.வை பொறுத்தவரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு.எங்கெல்லாம் பா.ஜ.க. அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது.

அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை.இந்த முடிவை அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பா.ஜ.க. தவம் கிடந்தார்கள்.

இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறதுஅ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும்.பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும்.தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP wants anyone fall feet They go any extent SDBI Aboobacker Siddiqui who left AIADMK alliance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->