டெல்லியில் அதிகாலை நேரத்தில் திடீரென இடிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்...!!! 4 பேர் உயிரிழப்பு!
building collapsed Delhi morning 4 people died
டெல்லியின் இன்று அதிகாலை 3 மணியளவில் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

இந்தக் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் மாட்டிக்கொண்டனர். அதிலிருந்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடை பெற்றது. இருப்பினும், கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
டி.சி.பி. சந்தீப் லம்பா:
இதுகுறித்து வடகிழக்கு மாவட்ட கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா தெரிவித்ததாவது," தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் டெல்லி காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.
டெல்லி தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு காரணமாக அவர்கள் தெரிவிப்பது, 'டெல்லியில் நேற்றிரவு திடீரென வானிலை மாறியது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது' எனத் தெரிவிக்கின்றனர்.
English Summary
building collapsed Delhi morning 4 people died