கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்பு தான் பட்ஜெட் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான முழு மிகநிலை பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மத்திய பட்ஜெட் குறித்து ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

அந்த பதிவில் 'கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப்  பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை.

நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை. 

சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalahasan tweet about budget 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->