கோவில் நில மோசடி வழக்கு - காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் இடைநீக்கம்.!
karaikkal district deputy collector suspend for temple property case
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், இந்த நில மோசடியில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பதும், அவர் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து போலீசார் துணை ஆட்சியர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோவில் நில மோசடி வழக்கு தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஆட்சியர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.
அதன் பின்னர் துணை ஆட்சியர் ஜான்சனை இடைநீக்கம் செய்து ஆளுநர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்காக நகலை காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை ஆட்சியர் ஜான்சனிடம் அதிகாரிகள் வழங்கினர்.
English Summary
karaikkal district deputy collector suspend for temple property case