12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! கராத்தே பயிற்சியாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.!
Karate coach sentenced to 10 years in prison for raped 12 years old girl in Karnataka
கர்நாடக மாநிலத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கராத்தே பயிற்சியாளருக்கு பத்து ஆண்டுகள் சிறை தாண்டனை விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் கராத்தே பயிற்சியாளர் உமேஷ் பங்கேரா(45). இவரிடம் கராத்தே பயிற்சி பெற்று வந்த 12 வயதுடைய சிறுமியை மிரட்டி உமேஷ் பங்கேரா, கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு உடுப்பி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உமேஷ் பங்கேராவுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 22 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
English Summary
Karate coach sentenced to 10 years in prison for raped 12 years old girl in Karnataka