வலைத்தளங்களில் போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தராமையா உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வலைத்தளங்களில் போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தராமையா உத்தரவு.!

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையாவை காவல் அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கிருஷ்ணா இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்போது சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தவறான தகவல்களை அதிகளவில் பரப்பினர். அதே போல் தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக போலி செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன. 

இந்த வேலையை நமது அரசியல் எதிரிகள் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால், வலைத்தளங்களில் போலி செய்திகளை அதிகமாக பரப்பி சமுதாயத்தில் அமைதியை குலைப்பதற்கு முயற்சி செய்வார்கள். அதனால் ஆரம்பத்திலேயே பொய் செய்திகள் எங்கிருந்து பரப்பப்படுகிறது என்பதை கண்டறிந்து உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் குழந்தைகள் கடத்தல், மாட்டிறைச்சியை கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து பொய் செய்திகளை பரப்பி மாநிலத்தில் வன்முறையை ஏற்படுத்தினர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தயாராகி வருகிறோம். இந்த நேரத்தில் வதந்திகள் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். 

அதனால் இவற்றை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இதற்கு முன்னதாக பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலி செய்திகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தனியாக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டது. ஆனால், அந்தக் குழுவை பா.ஜனதா ஆட்சி அமைந்ததும் ரத்து செய்துவிட்டனர். 

தற்போது அந்த குழுவை மீண்டும் அமைக்க வேண்டும். மேலும், சைபர் குற்ற போலீசார் வதந்திகளை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மாதந்தோறும் இதுகுறித்து அறிக்கையை அளிக்க வேண்டும்" என்று அவர் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataga cm siddaramaiah order to action against spread fake news in social medias


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->