குமாரசாமியை தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம் - கர்நாடக முதல்வர் மிரட்டல்.!
karnataga cm siddaramaiah threat to arrest union minister kumarasami
சுரங்க முறைகேடு வழக்கில் தொடர்புடைய குமாரசாமியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம்,'' என்று மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா மிரட்டல் விடுத்துள்ளார்.
'மூடா' முறைகேடு வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்த, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த 17ம் அனுமதி அளித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மத்திய அமைச்சர் குமாரசாமி மீதான சுரங்க முறைகேடு வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கும்படி, ஆளுநரிடம், மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழு, நேற்று முன்தினம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கை, காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் செயலாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், குமாரசாமி கைது குறித்து முதல்வர் சித்தராமையா தெரிவித்ததாவது: "குமாரசாமியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம். தற்போதைக்கு கைது செய்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை.
இருப்பினும், அவர் இப்போதே பயந்து போயுள்ளார். தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் அனுமதி அளிப்பார் என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
karnataga cm siddaramaiah threat to arrest union minister kumarasami