முதல்வர், அமைச்சர்களின் சம்பளம் உயர்வு- கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு.!
karnataga government decide cm and mlas salary increase
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த சட்டத்திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறும் முதலமைச்சர் இனிமேல் 1.5 லட்சம் ரூபாய் பெறுவார். அமைச்சர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். இனிமேல் 80 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள்.
பென்சன் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. விமானம் அல்லது ரெயில் டிக்கெட் அலவன்ஸ் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. இதுபோக சொந்த தொகுதிகளில் பயணம் மேற்கொள்ள 60 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ அலவன்ஸ், டெலிபோன் கட்டணம், தபால் கட்டணம் அலவன்ஸ் 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.10 லட்சமாக உயர்த்தப்பட இருக்கிறது. சபாநாயகர் மற்றும் சட்ட மேலவைத் தலைவர் சம்பளம் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
karnataga government decide cm and mlas salary increase