கொரோனா பரவல் எதிரொலி - கர்நாடகாவில் முகக்கவசம் கட்டாயம்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது.இது குறித்து மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டம் நடத்தப்பட்டது. 

அந்தக் கூட்டத்தின் முடிவில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதுகுறித்த வழிகாட்டுதல் பிறப்பிக்கப்படும். மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளேன். கேரளாவில் இருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்பது தெரியவரும். 

அதன் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataga government order face mask compulsary for corona


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->