இனிமேல் நந்தினி நெய்யை தான் பயன்படுத்த வேண்டும் - கோயில்களுக்கு கர்நாடக அரசு உத்தரவு.!
karnataga government order to temples for use nandhini ghee
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி மலைக்கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளதாக எழுந்துள்ள புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோயில்களில் பயன்படுத்தப்படும் பிரசாதங்களில் நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால், கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, மாநில அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அறநிலையத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அரசின் அறநிலையத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக திருப்பதி லட்டுக்கும் கர்நாடகா அரசின் நந்தினி நெய் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், எட்டு மாதமாக திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
English Summary
karnataga government order to temples for use nandhini ghee